வெளிவாரி கற்கைகளுக்கும் வரி அறவிட வேண்டும் – ஜனாதிபதி
தனியார் கல்வி வேண்டாம் என்று கூச்சல் போடும் பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்புகளை பணத்திற்காக வகுப்புகளை நடாத்துவதாகவும், தனியார் முறையை பின்பற்றுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலவசக் கல்வி என்பது வெளி மற்றும் உள்ளகக் கல்வி இரண்டும் பணமில்லாமல் இருக்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, கல்வியை யாராவது வியாபாரமாக மாற்றினால் அதற்கு வரி விதிக்க வேண்டும் என்றார்.
எதிர்காலத்தில் அரசாங்க தொழில்கள் இல்லாது போய்விடும் என்றும், தொழில் சந்தையின் தேவைக்கேற்ப கல்வி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கல்வி, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
https://sinhala.teachmore.lk/?p=920