5ஆம் திகதி தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
_________________
மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் திங்கட்கிழமை (05) தொடக்கம் இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும் .பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 28ஆம் திகதி வெளியிடப்பட்ட பெறுபேறுக்கமைய, உயர்தரத்தில் சித்தியடைந்த 42,519 மாணவர்களுக்கு இவ்வருடம் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளதாகவும் இதில் மருத்துவ பீடத்துக்கு 2035 பேருக்கும் பொறியியல் பீடத்துக்கு 2238 பேரும் அனுமதி வழங்கப்படவுள்ளது என்றார்.
பல்கலைக்கழக பாடநெறிக்கான தெரிவுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் கைநூல் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட புத்தக நிலையங்களுக்கு 3 மொழிகளிலும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதற்கமைய சனிக்கிழமை அந்தப் புத்தகத்தை குறித்த புத்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் பிரதான பத்திரிகைகளில் புத்தக நிலையங்கள் தொடர்பான தகவல்கள் பிரசுரிக்கப்படும் என்றார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 03 வார கால அவகாசம் வழங்கப்பட்டு 23ஆம் திகதி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதியாகும் என தெரிவித்தார்.
மேலும் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 03 மொழிகளிலும் அறிவுறுத்தல்களைப் பார்வையிடலாம் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னர் குறித்த காணொளியைப் பார்வையிடுவது அவசியம் அவர் தெரிவித்துள்ளார்.
5 වැනිදා සිට විශ්වවිද්යාලවලට අයදුම් කළ හැකියි
__________________
විශ්වවිද්යාලවලට සිසුන් ඇතුළත් කර ගැනීමේ අයදුම්පත් ලබන සඳුදා (05) සිට වෙබ් අඩවිය හරහා ඉදිරිපත් කළ හැකි බව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාවේ සභාපති මහාචාර්ය සම්පත් අමරතුංග මහතා පවසයි.
රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ අද පැවති ප්රවෘත්ති සාකච්ඡාවකට එක්වෙමින් ඔහු මේ බව කියා සිටියා.
මෙවර විශ්වවිද්යාල ප්රවේශ සඳහා ඉල්ලුම්පත් 28 වැනි දා ප්රකාශයට පත් කරන බව ඔහු කියා සිටියා.
සිසුන් 42,519ක් මෙවර විශ්වවිද්යාලයට ඇතුළත් කර ගැනීමට සැලසුම් කර ඇති බවත්, වෛද්ය පීඨයට සිසුන් 2035ක් ද ඉංජිනේරු පීඨයට සිසුන් 2238ක් බඳවා ගන්නා බවත් ඒ මහතා පැවසීය.
විශ්වවිද්යාල පාඨමාලා තෝරා ගැනීම් සඳහා විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව විසින් ප්රකාශයට පත් කරන ලද අත්පොත මේ සතියේ සිකුරාදා තෝරාගත් අලෙවිසල් වෙත භාෂා තුනෙන්ම බෙදාහරින බවත්
එම පොත සෙනසුරාදා එම පොත් අලෙවිසල්වලින් ලබාගත හැකි බවත් ඒ මහතා පැවසීය.
ඒ සමගම ඉරිදා පළවන ප්රධාන පුවත්පත්වල පොත් අලෙවිසැල් සම්බන්ධ තොරතුරු පළ කරන බවද හෙතෙම පැවසීය.
සැප්තැම්බර් 05 වැනිදා අයදුම්පත්ර ඉල්ලීම ආරම්භ කරන බවත් සති 03ක කාලයක් ලබාදෙන බවත් අයදුම්පත් එවීමේ අවසන් දිනය ලබන 23 වැනිදා බවත් ඒ මහතා පැවසීය.
www.ugc.ac.lk වෙබ් අඩවියට පිවිසීමෙන් සිංහල, දෙමළ සහ ඉංග්රීසි යන භාෂා 03 කින් උපදෙස් අඩංගු වීඩියෝව නැරඹිය හැකි බවත් අයදුම්පත් පිරවීමට පෙර වීඩියෝව නැරඹිය යුතු බවත් ඔහු පැවසීය.