2019 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலை கைப்பணி போட்டி மற்றும் கண்காட்சியை தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் கல்வி அமைச்சி ஏற்பாடு செய்துள்ளது.
படைப்பாற்றல் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகவும் அமையும்.
இந்த கண்காட்சியில் களிமண் சார்ந்தவை, தும்பு, இலை மற்றும் புல் சார்ந்தவை, தும்பர வடிவமைப்புகள், பிரம்பு மற்றும் மூங்கில், உலோகம், ஆபரணங்கள், பதிக், ரேந்தை, வெண்கலம், பலகை சார்ந்தவை, தோல்சார் பொருட்கள், கற்கள் சார்ந்தவை, புடவைகள், முகமூடிகள் மற்றும் பொம்மைகள், உள்நாட்டு இசை பொருட்கள், சம்பிரதாய வரைபுகள் மற்றும் சிற்பங்கள் , பாரம்பரியம் சார்ந்த ஆக்கங்கள், தெங்கு/ கித்துல்/எள்ளு/ பனை சார்ந்தவை, சேசத் போன்ற பல்வேறு கைவினைப் பொருட்கள்; மாணவர்களின் படைப்புகளாக ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக விபரங்களுக்கு 0112787604 – 0112784425 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.