பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியை பாடசாலைகளை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்துவதும் முயற்சியை அடுத்த வருடம் 2021 வரை பிற்போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகளை வகைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே இதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இம்முறையை உருவாக்குவதற்காக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக வகைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான செயற்றிட்டங்களை கல்வி அமைச்சு முன்னெடுத்துச் செல்கின்றது.
எனினும் பாடசாலைகளை வகைப்படுத்தும் செயற்றிட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கூடிய சூழ்நிலை இல்லை என உயர் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாரத்தில் விண்ணப்பம் கோரப்படவுள்ள 2019-2020 கல்வி ஆண்டிற்கு மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் அடிப்படையிலேயே மாணவர் உள்ளீர்ப்பு இடம்பெறும் எனவும் உயர் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.