அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக நிதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இம்முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நிதி அமைச்சு உரிய கவனம் செலுத்தும் என தான் நம்புவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுன்ற உறுப்பினர் நளின் பண்டார வினால் தொடுக்கப்பட்ட வாய்மொழி வினா ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை விளக்கினார்.
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பி.சி. பெரேரா ஆணைக்குழுவினால் தோற்றுவிக்கப்பட்டதாகும். 2015 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது அதிபர் – ஆசிரியர்களது சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிபர்களின் சம்பளம் சுமார் 106 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரச துறை சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நிதி அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது. அக்குழு அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளது.
ஆசிரிய ஆலோசகர் சேவை மற்றும் அவர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக விரைவில் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.