இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. இந்தப் பரீட்சையின் போது கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்துக்கொண்டு பரீட்சைக்குத் தோற்றிய மூவர் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
புத்தளம் பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்தில் பரீட்சை ஆரம்பமாகி சிறிது நேரத்தில் இவ்வாறு மூன்று அபேட்சகர்களிடமிருந்து கைத்தொலைபேசிகளை பரீட்சை மேற்பார்வையாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இப்பரீட்சைக்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து சுமார் 500 பேர் தோற்றியிருந்தனர். இவர்களுக்காக புத்தளம் பாத்திமா பாலிகாவில் மூன்று நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பரீட்சை ஆரம்பிக்கும் முன்னர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கைத்தொலைபேசியை வைத்திருப்பது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது (அத)