எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் ஏப்ரல் விடுமுறையை ஆரம்பித்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக வெளிவந்த செய்தயை மறுத்த கல்வி அமைச்சு மீண்டும் இன்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறியிருந்தது.
அதன் படி, இப்போது நடைபெறும் ஊடகவியல் சந்திப்பில்,
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.