அனைத்து அரச பாடசாலைகளையும் திறப்பதற்கான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, 2021 ஆம் ஆண்டிற்கான மேல் மாகாணத்தில் தரம் ஒன்று தொடக்கம் 13 வரையான வகுப்புகளுக்கு அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு சுகாதாரமான இடமாக, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கு பாடசாலைகளைத் தயார்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க நாளை முதல் 2021/03/26 முதல் 2021/03/28 வரை மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுடன் மாணவர்களைப் பரீட்சைகள் மற்றும் போட்டிகளுக்கு வழிநடத்துவது பொருத்தமானதல்ல.
மேலும் பாடசாலைச் சூழலுக்கு மாணவர்களைப் பரீட்சயப்படுத்துவற்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தகுந்த செயல்களைச் முன்னெடுப்பது என்பன வலியுறுத்தப்பட்டுள்ளன.
தனிநபர்களுக்கிடையிலான தூரத்தைப் பாதுகாக்க வகுப்புகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான வழிகாட்டியும் இதில் அடங்கும். அதன்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் 15 மாணவர்களுக்கு குறைந்த வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கை 16 முதல் 30 என்றிருப்பின் இரு குழுக்களாகப் பிரிக்க வேண்டும், வகுப்புகள் ஒரு வாரம் இடைவெளியில் நடத்தப்பட வேண்டும். 30 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும், வகுப்புகள் சம எண்ணிக்கையிலான நாட்களில் நடத்தப்பட வேண்டும்.
கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களை வழக்கம் போல் கடமைக்கு சமூகளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.
மேலதிக வழிகாட்டல்கள் கல்வி அமைச்சின் உத்தியோகப் இணையதளத்தில் (www.moe.gov.lk) வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, முதல் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் 09/04/2021 அன்று நிறைவடையும், இரண்டாவது தவணைக்காக பாடசாலைகள் 2021/04/19 அன்று ஆரம்பமாகும்.