ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கல்வி வலயமான லொஸ் ஏன்ஜல்ஸ் இல் சம்பள அதிகரிப்பு மற்றும் வசதிகள் அதிகரிப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆசியர்கள் வேலை நிறுத்ததில் குதித்துள்ளர்.
30 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது ஆசிரியர் வேலைநிறுத்தமாக அடையாளப்படுத்தப்படும் இதில் சுமார் முப்பதாயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளர். இதன் காரணமாக அரச பாடசாலைகளில் கற்கும் சுமார் ஐந்து இலட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது.
லொஸ் ஏன்ஜல்ஸ் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை தாம் அவதானித்து வருவதாகவும் தாமும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதாகவும் ஐக்கிய அமெரிக்க முழுவதுமுள்ள ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. (ஹிரு நியுஸ்)