− அமைச்சர் பந்துல குணவர்தன
அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் நிலவும் அனைத்து வித முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அரசு ஊழியர்களது சகல சம்பள முரண்பாடுகளும் தேசிய சம்பளம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி அவற்றை அகற்றுவதற்காக ஒரு திட்டம் வகுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். அத்துடன் அனைத்து நகரங்களிலும்உள்ள வைத்தியசாலைகளிலும் அக்ரஹார காப்பீட்டு நன்மைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு வார்ட்டுகளை அமைக்கும் திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.