வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரியுங்கள் என்று தேசிய தொழில் சங்க மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்து நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றால் போல் அரச ஊழியர்களின் சம்பமளத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் ஆரம்பித்துள்ள வேளையில், அக்கோரிக்கைகளை மழுங்கடிக்கச் செய்யும் பொருட்டு நிதி அமைச்சு அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பா ஏமாற்று அறிக்கைகளை வௌியிடுவதாக தேசிய தொழில் சங்க மத்திய நிலையத்தின் தலைவர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய வாழ்க்ைக செலவு அதிகரிப்பு 127.4 அலகாக காணப்படுகிறது. அதன்படி ஒரு குடும்பத்திற்கு ஆகக் குறைந்தது 40895.4 ரூபா மாதச் செலவுக்குத் தேவைப்படுகிறது.
எனவே, ஆகக் குறைந்த சம்பளமான 21746 ரூபாவை அதிகரித்து அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிக்குமாறு நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.