உள்நாட்டு மற்றும் சுதேச நடவடிக்கைகள் மற்றும் மாகாண சபை மற்றும் மாகாண பரிபாலண அமைச்சின் நிதி ஒதுக்கீடு பாராளுன்றில் தோற்கடிக்கப்பட்டதனால் அரச ஊழியர்கள் ஐந்தரை இலட்சம் பேருக்கு சிங்கள மற்றும் தமிழ் புதுவருடத்திற்கு முன்னர் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் ஒன்பது மாகாணங்கள் மற்றுமு் மாகாண நிர்வாகத்திலிருள்ள 341 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் மேற்கொண்டிருந்த உடன்பாட்டுக்கு மாற்றமாக கடந்த 28 ஆம் திகதி குறித்த நிதி ஒதுக்கீடு பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது.
மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், அனைத்து கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஒன்பது மாகாணங்களினதும் மாகாண அலுவல்கள் திணைக்களங்கள் 341 இன் செயற்பாடுகள் முற்றாக சில மாதங்களுக்கு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.