அரச ஊழியர்ளை கடமைக்கு அழைத்தல் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்தியவசிய சேவைகளை வழங்குவது தடைப்படாமல் அரச நிறுவனங்களை கொண்டு நடாத்த தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு, அவர்களை சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு சேவைக்கு அழைக்கும் அதிகாரத்தை குறித்த அமைச்சின் செயலாளர்/ திணைக்கள தலைவர்/ நிறுவகத் தலைவர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.
உத்தியோகபூர்வ வாகனம் உள்ள, அல்லது பிரயாணக் கொடுப்பனவு பெற்றுக் கொள்ளும் அல்லது கூட்டாக பயண ஏற்பாடுகள் உள்ள நிறைவேற்று அதிகாரிகளுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயம் செல்லுபடியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைக்கு அழைக்கப்பட்டவர்கள் தவிர்ந்தவர்கள் ஒன்லைன் முறையில் சேவைகளைத் தொடர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.