அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக தெரண ஊடக உரிமையாளர் திலித் ஜயவீர மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுள் ஒருவரான டயன் கோமஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அருண செய்தி வெளியிட்டுள்ளது.
திலித் ஜயவீர ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ் நிறுவக வியாபாரத் தொகுதியின் தலைவராகவும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய ஜனாதிபதியின் மிக முக்கிய புள்ளியாக அறியப்பட்டவர்.
டயன் கோமஸ் தற்போது ஜோர்ஜியாவில் இலங்கைக்கான கொன்சலராகவும் நெஸ்லேயின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றுகிறார்.
அத்தோடு டயன் கோமஸ் மாஸ் ஹோல்டிங்ஸ் வியாபார ஒழுங்கமைப்புக்குச் சொந்தமான ஹெல க்லொத்திங் நிறுவனத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
.