ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக தன்னார்வமாக ஒன்லைன் கற்பித்தலை மேற்கொள்கின்றனர். அவர்களின் கற்பித்தல் வசதியை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மவ்பிம சிங்கள இதழுக்கு பதிலளிக்கையில், அவர்களுக்கு நாம் சம்பளம் வழங்குகின்றோம் தானே என அவர் தெரிவித்துள்ளார்.
அச்செய்தியின் தமிழ் சுருக்கம் வருமாறு:
தலைப்பு: ஆசிரிகள் ஒன்லைனில் கற்பிக்க உபகரணங்கள் வழங்கத் தேவையில்லை. அவர்களுக்கு சம்பளம் வழங்குகின்றோம்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை நிறைவேற்ற முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கடந்த காலங்களில், தொலைதூர ஒ்ன்லைன் கல்வி முறையை பராமரிப்பதற்காக தங்கள் சொந்த செலவில் உபகரணங்கள் மற்றும் இணைய வசதிகளை வழங்கியதாகவும், அவர்கள் ஆரம்பித்துள்ள தன்னார்வ கல்வி முறைக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த சலுகையும் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக கல்விக்காக செலவழிக்க ஒரு பெரிய தொகை மிச்சம் இருப்பதாகவும், ஒன்லைன் கல்வியை எளிதாக்க அரசாங்கம் அந்த பணத்தை பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா வை நாம் தொடர்பு கொண்டு வினவினோம்.
குற்றம் சாட்டுபவர்கள் அதிகம் இருந்தாலும், இதனை தன்னார்வமாகச் செய்தாலும், நாங்கள் அவர்களுக்கு சம்பளம் வளங்குகிறோம். உண்மையாகச் சொல்வதானால், அரசாங்கம் எவ்வளவு தான் இருந்தாலும் சம்பளம் வழங்குகின்றது. பிள்ளைகளுக்காகத் தான் நாம் இதனை செய்கிறோம். பிள்ளைகளுக்காக சிந்திக்க வேண்டு்ம்.
இந்த ஒன்லைன் கல்வி முறையை பராமரிக்க கல்விக்காக ஒதுக்கப்பட்டதிலிருந்து மீதமுள்ள பணத்தை பயன்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என வினவப்பட்டது
“என்னால் கேட்க முடியாது. பணம் தவறாகப் பயன்படுத்தப்படாது, தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டேன் என்று நான் நேர்மையாக உத்தரவாதம் அளிக்கிறேன். என்றார்.
கற்பித்தலை விட்டு தூரமாகியுள்ள ஆசிரியர்களிடம் கோரிக்கை வைக்க வில்லையா என்று வினவப்பட்டது.
“நான் எல்லோரிடமும் ஒரு கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமில்லை கோரிக்கை வைத்துத் தானே உள்ளது. குழந்தைகளைப் பற்றி சிந்தித்து பிரச்சினைகள் இருப்பின் பேசவும் தீர்க்கவும். என்றார்.