பாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்துவதற்கான ஒழுங்குகள் குறித்த புதிய சுற்றுநிருபம் ஒன்றை இன்றைய தினம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் உறுதிளித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று மூன்று தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல் சுற்றறிக்கைகளை மீறி சில மாகாணங்கள் ஆசிரியர் வருகை வெளியேறுகை தொடர்பாக முரண்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் காரணமாக, கல்வி அமைச்சு எதிர்பார்க்கும் ஒழுங்கு முறையின் கீழ் பாடசாலைகளை நடாத்த முடியாது, ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கல்வி அமைச்சின் செயலாளருடன் இன்று, இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல் மேற்கொண்டதாக சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை இன்றைய தினமே வெளியிடுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.