இன்று ஆரம்பமாகும் 2000 பிராந்திய கற்றல் நிலையங்கில் கடமையாற்ற நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை இந்நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க, கல்வி அமைச்சு மாணவர்களின் கல்வியை சீரமைக்க முன்ெனடுக்கும் எந்த திட்டத்தையும் எதிர்க்க வில்லை என்றும் ஆனால் அதற்கான உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய மாகாணத்தில் 442 நிலையங்களும் வடமேல் மாகாணத்தில் 345 நிலையங்களுமாக இந்நிலையங்கள் நாடுமுழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டில் இன்னமும் கோவிட்19 நிலைமை சீராகவில்லை. குறையவுமில்லை. ஆனால் 5 ஆம் திகதியிலிருந்து இந்நிலையங்கள் ஆரம்பமாகின்றன.
எனவே, இங்கு கடமையாற்ற அழைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படல் வேண்டும்.
தடுப்பூசி பெற்றுக் கொள்ளாது இந்த கடமைகளில் கலந்து கொள்ள வேண்டாம் என நாம் ஆசிரியர்களிடம் வேண்டுகிறோம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.