ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு – அடுத்த அமைச்சரவைக்கு
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதோடு, அதற்கான தீர்மானங்களை மேற்கொள்வது அடுத்தவாரம் வரை பின்போடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவை இணைப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்தார்.
இன்று காலை இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க மாணவர்களின் கல்வி மீது அக்கரை இன்றி அரசு இப்பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமாக செயற்படவில்லை என்று குற்றம் சாட்டியதோடு,
சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை தொடரும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தார்.