அடுத்த வாரம் முதல் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
“ஒவ்வோர் ஆசிரியருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டத்தை நாம் உருவாக்கி வருகின்றோம். இந்நாட்டில் சுமார் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர். தவணை ஆரம்பிக்க முன் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என நாம் நம்புகிறோம்” என்றும் அமைச்சர் கூறினார்.
இதன் முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.