ஆசிரியர்கள் காலகண்ணி என்பது அரசின் நிலைப்பாடா?
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஆசிரியர்களை காலகன்னி என்று வர்ணித்திருப்பது அரசின் நிலைப்பாடா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பின்னணியில் ஆசிரியர்களை போராட்டத்திற்கு அழைத்துள்ளவர்கள் தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு பேசும் போது ஆசிரியர்களைக் காலகண்ணி என்று வர்ணித்துள்ளதை அடுத்து ஆசிரியர்களிடமும் சமூகத்திலும் பல்வேறு எதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் என்பதனால் அவரது கருத்து அரசின் நிலைப்பாடா என்பதை கல்வி அமைச்சரும் ஜனாதிபதியும் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பு
காலகண்ணி என்பது மூதேவிகள் என்பதை ஒத்த கருத்தில் பயன்படுத்தப்படும் சிங்கள சொல். அந்த சொல்லுக்கு தமிழில் சரியான அர்த்தத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை