அதிபர் ஆசிரியர்கள் மீதான அச்சுறுத்தலுக்கு இலங்கை கொமியுனிஸ்ட் கட்சி கண்டனம்
வட மேல் மாகாண ஆளுனர் தலைவராக உள்ள இலங்கை கொம்யுனிஸ்ட் கட்சி, ஆசிரியர்கள் அதிபர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்துள்ளது.
அக்கட்சியின் பிரதான செயலாளர் விசேட வைத்தியர் ஜீ. வீரசிங்க இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இக்கட்சியின் தலைவராகக் கடமையாற்றிய ராஜா கொல்லுரே கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கடமைக்கு வராத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளத்தை இடை நிறுத்துவதாக எச்சரிந்தவை குறிப்பிடத்தக்கது.