ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது கவனிக்க வேண்டியவை!
திரு.சந்திரகுமார் SLPS
ஆசிரியர் ஒருவர் பின்வரும் சந்தர்ப்பங்களில் இடமாற்றம் பெற்றுச் செல்வார்கள்.
🔥வருடாந்த ஆசிரியர் இடமாற்றம்.
🔥தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றம்.
🔥இரு ஆசிரியர்கள் ஒத்து இடமாற்றம்.
🔥ஒழுக்காற்று நடவடிக்கை இடமாற்றம்.
மேற்படி இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்.
அ)பின்வரும் மூன்று ஆவணங்களை பெற்று வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போதே சம்பளம் வழங்கப்படும்.
1️⃣குறித்த ஆசிரியர் சகல உபகரணங்கள், பொருட்கள் மற்றும் ஆவணங்களை முறையாக ஒப்படைத்து விட்டார் என்ற அதிபரின் சான்றிதழ்.
2️⃣குறித்த வருடத்தில் பெற்ற புகையிரத ஆணைச் சீட்டு தொடர்பான சான்றிதழ்.
3️⃣குறித்த வருடத்தில் பெற்ற லீவு தொடர்பான விபரங்களை கல்வி -B 100 படிவத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆ) பின்வரும் உறுதிப்படுத்திய ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
1️⃣முதல்/ இடமாற்ற நியமனத்தின் கடமையைப் பொறுப்பேற்ற சம்பவத் திரட்டுப் பதிவேட்டுப் பதிவின் பிரதி.
2️⃣முதல் மூன்று வருட சேவைக் காலம் தொடர்பான அறிக்கை.(புதிய நியமனம் பெற்றவர்கள் சேவையை உறுதிப்படுத்த தேவை)
3️⃣குறித்த/நடப்பு வருடத்திற்கான ஆசிரியர் செயலாற்றுகைத் தரங்கணிப்பை பூர்த்தி செய்து அதிபரின் சிபாரிசுகளை பெற வேண்டும்.
4️⃣கடந்த வருடத்திற்கான ஆசிரியர் செயலாற்றுகைத் தரங்கணிப்பை பூர்த்தி செய்து அதிபரின் சிபாரிசைப் பெற வேண்டும்.
5️⃣கடந்த ஐந்து வருடகால லீவு விபரங்களை கல்வி B-100 படிவத்தில் தனித்தனியாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
6️⃣சேவை விபரங்கள் தொடர்பான அறிக்கை.
7️⃣ஆசிரியர் பதிவுப் புத்தகத்தைப் பூர்த்தி செய்து அதிபரின் சிபாரிசுகளைப் பெற வேண்டும்.
8️⃣தாங்கள் கற்பித்த கடந்தகால தரம் 5/சா/த, உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கை.
*குறிப்பு*
வலயம் விட்டு வலயம்/மாகாணம் விட்டு மாகாணம் செல்வதாயின் வலயக் கல்வி பணிப்பாளரின் சேவை விடுவிப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குறித்த பாடசாலை அதிபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்..
🔥இடமாற்றக் கடிதம் கிடைத்தவுடன் சம்பவத் திரட்டுப்பதிவேட்டில் பதிவு செய்து, உடனடியாக ஆசிரியரிடம் இடமாற்றக் கடிதத்தை வழங்க வேண்டும்.
🔥மேன் முறையீடு செய்த ஆசிரியர்களுக்கு மேன் முறையீடு தொடர்பான கடிதம் கிடைக்கும் வரை குறித்த பாடசாலையில் சேவையாற்ற அனுமதிக்க வேண்டும்.
🔥இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் கோரும் ஆவணங்களை வழங்க வேண்டும்.
🔥ஆசிரியரை பாடசாலையில் இருந்து விடுவிக்கும் சான்றிதழை வழங்குதல் வேண்டும்.