இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 – தகுதிகாண் தடைதாண்டல் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீ்ட்சை பெப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், கல்வி அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில் குறித்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித அறிவித்துள்ளார்.
புதிய திகதி தொடர்பான அறிவித்தல் எதனையும் பரீட்சைத் திணைக்களம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.