ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்கான ஆய்வு மாநாடொன்றை தேசிய கல்வி நிறுவகம் ஏற்பாடு செய்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனகத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் நிகழ்நிலையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு மாநாட்டில் பல்வேறு ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளன.
பிரதான உரையை ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.பேராசிரியர் நாரத வர்ணசூரியவினால் நிகழ்த்தப்படும்.
மாநாடு நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
இம்மாநாட்டில் ஸும் செயலி ஊடாக இணைந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கலந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் மேலதிக விபரங்க்ள அறிய விரும்புபவர்கள் திருமதி தில்ஹானி ஹெட்டிகே, விரிவுரையாளர் (071-4487712 ) அல்லது கலாநிதி டி. கெப்பெட்டிகொட, பணிப்பாளர் (071-8029064), ஆகிய இலக்கங்களை அழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.
.