ஆரச்சிக்கட்டுவ, அடிப்பல, வெலிபேலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த உயர் தர வகுப்பைச் சேர்ந்த மாணவனுக்கு கொரோனா தொற்று இல்லை என ஆரச்சிக்கட்டுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதுவதற்கு தயாராகும் 17 வயது மாணனுக்கே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி காய்ச்கலால் பாதிக்கப்பட்ட மாணவன் பிரதேச மருத்து நிலையத்தில் மருந்து பெற்றுக் கொண்ட போதிலும் குணமடையாததன் காரணமாக சிலாபம் மருத்துவ மனைக்கு சென்ற போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் அடுத்த தினங்கான 8, 9 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த மாணவரை வீடு செல்ல அனுமதித்ததாக வைத்திய சாலையின் பணிப்பாளர் கே.பி. மல்லவராச்சி தெரிவித்தார்.
எனினும் குறித்த மாணவரையும் அவரோடு பழகியவர்களையும் அவரது குடும்பத்தாரையும் வீட்டில் தனிமைப்படுத்திய நிலையில் 14 நாட்கள் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எம்.ஜயசிங்க தெரிவித்தார்.
இம்மாணவன் கம்பஹா பிரதேசத்திற்கு தனியார் வகுப்புக்கு சென்றுவந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.