தமது முன்மொழிவுகளுக்கு புறம்பாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து மேல்மாகாணத்தின் ஆசிரியர் இடமாற்ற சபையினைபிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் 11 சபை நடவடிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளன.
இந்த விலகலை அறிவித்து குறித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மாகாணப் பணிப்பாளர் சிரி லால் நோனிஸ் க்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள அதேவேளை தமது முன்மொழிவுகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என அவை கோரிக்கை விடுத்துள்ளன.