இணையவழிக் கற்பித்தல் – ஒருஅனுபவப்பகிர்வு
தருமராசாஅஜந்தகுமார்
கொரோனாவால்உலகமே திசைதெரியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றது. சாப்பிட வழி இல்லாமல், பொழுதுபோக்கவழி இல்லாமல், கற்பதற்கு வழி இல்லாமல், வீடுகளில்தொடர்ந்திருக்கும் வெக்கையைத் தாங்கமுடியாமல் எத்தனையோ ஏக்கங்கள் உலகம் முழுவதும் விரிந்திருக்கின்றன.
இந்தவேளையில் ஒரு ஆசிரியனாக க.பொ.த உயர்தரமாணவர்களுக்கு ஏதாவது கற்றல்ஊக்கியாக இருக்க விரும்பியபோது நண்பர் பிரதீப் (Piratheep Thangarajah) இன் கரங்களும்இணைந்ததும் Zoom மூலமான கற்பித்தலில்இறங்கினோம். 07.04.2020 முதல் தமிழ்ப்பாடத்தை ஏழு நாட்களும் கற்பித்துவருகின்றேன். என்னுடன் வடக்குமாகாணத்தின் பிரலமான வளவாளர்களும் இணைந்திருக்கின்றார்கள்.
கலைத்துறைசார்ந்த அரசறிவியல், வரலாறு, இந்துநாகரிகம், கிறிஸ்தவ நாகரிகம், அளவையியலும் விஞ்ஞானமுறையும், புவியியல், நடனம் ஆகிய பாடங்களும் நடைபெறத்தொடங்கிவிட்டன. இப்பொது வணிகத்துறை மாணவர்களுக்கும் வகுப்புகளும் ஆரம்பித்துவிட்டோம்.
ஒருவகுப்பில் 100 மாணவர்கள் என்பதே இலவச செயலியின் எல்லை. நாளும் 100 மாணவர்கள் போட்டிபோட்டு கலந்து கொள்கின்றார்கள். சந்தர்ப்பம்கிடைக்காதவ்களுக்கும் பயனளிக்கும் முகமாக வகுப்பின் குரல்பதிவுகளைத் திகதிவாரியாக பாடவாரியாக பதிவேற்றி உதவிவருகின்றோம். அரசாங்கம்முதலில் திட்டமிட்டவாறு உள்ளங்கைக் கணிணிகளை உயர்தர மாணவர்களுக்கு வழங்கி இருந்தால் இதில் அனைத்து மாணவர்களும் பயனடைந்து இருப்பார்கள்.
வகுப்பறையைவிட இதில் பயனுள்ள பல அம்சங்கள் விளங்குகின்றன.
1. இதில்மாணவர்கள் யாரென்று முகம் காட்டாமலே ஐயங்களைக் கேட்கக் கூடிய வாய்ப்பு இருப்பதனால் மாணவர்களின் திறந்த உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
2. ஆசிரியர்களும்எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளக் கூடிய ஆய்த்த நிலையில் இருக்க வேண்டும்.
3. மாணவர்கள்விருப்பம் இல்லையெனில் விலகிச் செல்லும் சுதந்திரமானசூழல் காணப்படுகின்றது.
4. குரல்வழியாகமாத்திரம் அல்லாமல் குறுஞ்செய்தி மூலமாகவும் மாணவர்கள் தமது ஐயங்களை, கருத்துகளைச்சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
5. திரையில்பாடல்களை, பகுதிகளைக் காட்சிப்படுத்திப் பகிர்வதால் திறன்வகுப்பறை அனுபவங்களை( ளுஅயசவ ஊடயளள சுழழஅ) மாணவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
6. இலக்கணப்பகுதிகளைக்கற்பிக்கும் போது வெள்ளைபலகை போன்றவற்றில்அல்லது றுழசன போன்ற பகுதிகளில் நேரடியாக எழுதி விளங்கப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
7. வகுப்பில்குழப்படி செய்யும் மாணவர்களை இனங்காண்பதை விட இதில் இலகுவாகஇனங்காணலாம். யார் தேவையற்ற ஒலியெழுப்புகின்றார்கள். திரையைப் பகிரும்போது அதில் யார் எழுதி விளையாடுகின்றார்கள்என்பதை இனங்காணலாம். இனங்கண்டு தனிப்பட்ட குறுஞ்செய்தி எச்சரிக்கைச் செய்தி ஒன்றை அனுப்பலாம்;;. கேட்காது விட்டால் அப்புறப்படுத்தவும் முடியும்.
8.ஒரே நேரத்திலே பல மாணவர்கள்காட்சித் திரைகளைதமக்கு ஏற்றவாறு பெருப்பித்தோசிறுப்பித்தோ பார்வையிடலாம்.
சிலதீமைகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றை இப்போது பொருட்படுத்தத் தேவையில்லை.
கொழும்பு. திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 582 மாணவர்கள் இதுவரை பயன்பெற்று வருகின்றார்கள் என்பதை பின்னூட்டல் மூலமாகப் பெற்றுக்கொள்ளமுடிந்துள்ளது. நாம் எமது வீட்டில்இருந்து கொண்டே பல்வேறு பிரதேச மாணவர்களுக்கு எம்மால் முடிந்த உதவியைச் செய்யமுடிகின்றதே என்ற ஆத்ம திருப்திஏற்படுகின்றது, இன்னும் புதிய வளவாளர்களையும் இணைக்கவிரும்புகின்றோம். பயனடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். இது முற்றிலும் இலவசமானசேவை. தமிழ்ப்பாடம் ஒரு வாரத்தில் 14 மணித்தியாலங்கள்இடம்பெறுகின்றது என்பது மேலதிக செய்தி. அவற்றின் பதிவுகளையும் பெற்றுக்கொள்ளும் இணைப்புகளும் உண்டு. பாடரீதியாக மாணவர்களின் பின்னூட்டல்களும் கோவைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி இன்னும் விரிவாக ஒரு கட்டுரை எழுதஇருக்கிறேன என்பதையும் சொல்ல ஆசைப்படுகின்றேன்.
கலைப்பிரிவுமாணவர்கள் வகுப்பிலேஇணைந்துகொள்வதற்கானஇலக்கம்
ZOOM Meeting ID: 318 867 8954
கலைப்பிரிவுமாணவர்கள்குரல்பதிவுகளைபெற்றுக்கொள்ளும்இணைப்பு.
வணிகப்பிரிவுமாணவர்கள்வகுப்பிலேஇணைந்துகொள்வதற்கானஇலக்கம்
ZOOM Meeting ID: 418 180 4329
வணிகப்பிரிவுமாணவர்கள்குரல்பதிவுகளைபெற்றுக்கொள்ளும்இணைப்பு.