இரண்டாவது தவணைக்கான விடுமுறை ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய அவசியம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
க.பொ.த. உயர் தரப் பரீட்சை இந்த ஆண்டு அக்டோபர் 4 முதல் அக்டோபர் 30 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அக்டோபர் 3 ஞாயிற்றுக்கிழமை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 ஜனவரி கடைசி வாரத்தில் நடைபெறும்.
இதுபோன்ற பின்னணியில், ஓகஸ்ட் பாடசாலை விடுமுறை நீண்டதாக வழங்க முடியாது. பரீட்சைக்கு தயாராகுவதற்கு காலம் வழங்கும் நோக்கத்துடன் விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.