teachmore exclusive: பாடசாலை விடுமுறைகளை மாற்றி ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கோவிட் நிலைமையின் தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 பலமைப் பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றை ஒக்டோபரில் நடாத்துவதாக கல்வி அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
அவ்வாறே டிசம்பர் மாதம் நடைபெறும் க. பொ. த சாதாரண தரப் பரீட்சையை ஜனவரி மாதத்தில் நடாத்துவதாகவும் அறிவித்திருந்தது.
எனவே, ஓகஸ்ட் விடுமுறையை ஒக்டோபரில் வழங்கவும், டிசம்பர் விடுமுறையை ஜனவரியியில் நடாத்தவும் கல்வி அமைச்சு திட்டமிடுவதாக அறிய முடிகிறது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சில் கடந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் கல்வி நடவடிக்கைகளைத் தொடரவும், ஒக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறைகளை வழங்கவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
க.பொ.த. உயர் தரப் பரீட்சை ஒக்டோபர் 04 முதல் ஒக்டோபர் 30 வரையும், ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 03-ம் தேதியும், 2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2022 ஜனவரி கடைசி வாரத்திலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.