பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது நாளான இன்றும் மாணவர் சமூகமளிக்கவில்லை என பாடசாலைத் தகவல்கள் தெரவிக்கின்றன.
குறிப்பாக நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் பாரிய வீழ்ச்சி காரணப்படுவதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
நேற்று பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்களில் பெரும்பாலானோர் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்பது அவதானமாகும்.
எனினும், நேற்று சமூகமளித்த மாணவர்களின் எண்ணிக்கையை விட சற்று அதிகமான மாணவர்கள் வருகை தந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கல்வி அமைச்சு பெற்றாரிடம் ‘பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர் வரவு எதிர்வரும் நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என கல்வி அமைச்சர் நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டாம் தவணைக்காக பல எதிர்ப்புகளுக்கும் அச்சநிலைக்கும் மத்தியில் பாடசாலைகளை நேற்று ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
மாணவர் வரவு அதிகரிக்கும் போது பொதுவாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.