இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 க்கு நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்தராந்த அறிவித்துள்ளார்.
திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் இரண்டுமே ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்துவதற்கான பிரேரணைகளின் அடிப்படையில் அதற்குத் தேவையானவகையில் ஆளணியினரையும் உள்ளீர்க்கும் தேவை உள்ளதனால் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2162 ஆம் இலக்க வர்த்தமாணி அறிவித்தலை ரத்துச் செய்வதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பிரேரணைகள் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையினரின் பிரேரணைகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு துறை சார்ந்த நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ளப்பட்டு புதிய வர்த்தமாணி அறிவித்தலை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்காெள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (கல்விச் சேவைகள் நிலையம்) அவர்களுக்கு அறிவித்துள்ளார்.