2018 ஆம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட சட்டமாணி அனுமதிக்கான பரீட்சையில்மோசடிகள் இடம்பெற்று்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக பரீட்சைக்குத் தோற்றிய ஒரு குழுவினர் இன்று (15 ஆம்திகதி) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்து விளக்கமளித்தனர்.
2018-05-20 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற போதிலும் பரீட்சை நடைபெற்று ஆறுமாதங்களுக்குப் பின்னரே பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகவும் முதலாவது முறை பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர் இணையத்தளத்தின் மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னைய பட்டியலின் படி சித்தியடையாத பலர் இரண்டாவது பட்டியலின் படி அதிக புள்ளிகளுடன் சித்தி பெற்றுள்ளமை சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக பாராளுன்றின் கவனத்திற்கு கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது.