கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமின் அனுசரனையின் கீழ் கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலை கூடைப்பந்து ஒன்றியம் மற்றும் ஒருங்கிணைந்த இலங்கை நெஸ்லே அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இலங்கை கூடைப்பந்தாட்ட தேசியபோட்டியானது 28வது தடவையாக ஆகஸ்ட் மாதம் 1ம், 2ம் மற்றும் 3ம் திகதிகளில் குருநாகல் வெலகேதர விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை 15 இடங்களில் முதனிலை போட்டிகள் நடைபெற்று இறுதிநிலைப் போட்டிகளுக்காக யு குழுவால் 370 பாடசாலைகளும் டீ குழுவால் 90 பாடசாலைகளுமாக மொத்த பாடசாலை அணிகள் 460 பங்குப்பற்ற உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அதன்படி யு குழுவின் வயதெல்லையாக 13, 15, 17 மற்றும் 19 வயது 04 அணியினரும்
டீ குழுவின் வயதெல்லையாக 15, 17, 19 வயதில் அணியினராக போட்டிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 28 வருடங்களாக இந்தபோட்டிகளிற்கான முழுமையான அனுசரணையை கல்வி அமைச்சு மற்றும் ஒருங்கிணைந்த இலங்கை நெஸ்லே இணைந்து வழங்குவது எங்களுடைய பாடசாலை கூடைப்பந்து சங்கத்திற்கான பலமாக காணப்படுகின்றது என்பதை மிகவும் பெருமையுடன் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதேபோல சர்வதேச மட்டத்திற்கு எமது பிள்ளைகளைக் கொண்டு செல்வது மிகப்பெரிய ஆதரவு எனவும் நீங்களும் அதில் ஒருபகுதியினர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தபோட்டிகளை நடாத்துவதில் வழிகாட்டுதல்களை பெற்று தந்த கல்விஅமைச்சரின் விஷேட ஆலோசகராக பணிபுரிகின்ற முன்னாள் விளையாட்டு பணிப்பளார் சுனில் ஜயவீரவை இந்தநேரத்தில் நினைவு கூருவது இந்தபோட்டிகளினது முன்னோடியாக வரலாற்றிற்கு இணைத்துக் கொண்டேயாகும்.அதேபோல இந்தபோட்டிகளின் வெற்றிக்காக மிகப்பெரிய ஆதரவை வழங்கிய முன்னாள் விளையாட்டு இயக்குநராகிய ஒலிவியா மாலனிகமகேவும் இந்நேரத்தில் நன்றியுள்ளதுடன் நினைவு கூருகின்றோம். இந்தவருடப் போட்டிகளை வெற்றிகரமாக நடாத்துவதற்கு நடுவர்களாக கடைமையாற்றுகின்றஅதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதன்படி முழுமையாக 550 பாடசாலைகள் பங்குப்பற்றியுள்ளதுடன் முதல்நிலை போட்டிகளுக்காக 15 இடங்களில் 9360 மாணவர்கள் பங்குப்பற்றியுள்ளார்கள் என்பதையும் இறுதி நிலைபோட்டிக்காக 5500 மாணவர்கள் பங்குப்பற்றுகிறார்கள் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதன் அடிப்படையில் இந்த இறுதிப் போட்டிகள் ஆவணி மாதம் 1ம், 2ம் மற்றும் 3ம் திகதிகளில் குருநாகல் வெலகேதர விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. போட்டி வீரவீராங்கனைகள் தங்குவதற்கான மையங்களாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவை வழங்கப்பட்டுள்ளன.
1. கு/சேர் ஜோன் கொதலாவல வித்தியாலயம்
2. கு/லக்தாஸ் மகாவித்தியாலயம்
3. கு/புனிதபவுல்மகளிர் வித்தியாலயம்
கு/மலியதேவ மகளிர் வித்தியாலயம் மற்றும் புனித கன்னியர் மடம் வித்தியாலயம் என்பன பாடசாலைகள் இந்த போட்டிகளை வண்ணமயமாக்குவதற்கு பேண்ட் குழுவினர் மற்றும் முன்னிலைப்படுத்தல் குழுவினருடன் பங்குபற்றுகின்றன.
இந்தபோட்டிக்கு கௌரவ சிறப்பு விருந்தினராக கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட தொடர்புபட்ட சிறப்புவிருந்தினர்களையும் உள்ளடக்கி 2019.08.03ம் திகதி அன்று 28ஆவது இலங்கை தேசிய போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அறியதருகின்றோம்.