இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து பாடசாலை சீருடைகளை வாங்க அமைச்சரவை அனுமதி அளித்ததுள்ளது.
அதன் படி, கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்துள்ள ஆடைத் தயாரிப்பாளர்களிடமிருந்து விலை மனுக் கோரல்கள் கோரப்பட்டு அதன் பின்னர் பொருத்தமான வழங்குனர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதிளித்துள்ளது.