எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இவ்வருடத்திற்குள் மேலும் இருபது ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை தொடர்பான இராஜாங்க அமைச்சர் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27(2) இன் படி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 57000 க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். எமது காலத்தில் வழங்கப்பட்டது போன்று இவ்வருடம் இவர்கள் அனைவருக்கும் தொழில் வழங்குவதற்கு திட்டமிடுமாறு மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடந்த வருடம் வெறும் 5100 பபேருக்கே அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக் காட்டிய அவர் தமது அரசாங்கம் சுமார் 2012 ஆம் ஆண்டு 48000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கியமையை நினைவுபடுத்தினார்.
இதற்கு பதிலளித்த ரச கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை தொடர்பான இராஜாங்க அமைச்சர் தொழிலற்ற பட்டாதிகளுக்கு கட்டம் கட்டமாக தொழில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 20000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். .