அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட, பல்லைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பாடநெறிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதை இடைநிறுத்தும் உத்தரவை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை எதிர்வரும் புதன் கிழமை (22) ஆம் திகதி வழங்குவதாக உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனு இன்று மூன்றாவது நாளாக ஆராயப்பட்டது. புவனேக அழுவிஹார, எஸ்.துரை ராஜா மற்றும் யசன்த கோதாகொட ஆகிய உயர் மன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இது ஆராயப்பட்டது.
அதன் பிறகே இந்த அறிவிப்பை உயர் நீதி மன்றம் விடுத்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப்பரீட்சைக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றிய 42 மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.