உயர்தர வகுப்பு இடம்பெறும் அனைத்து பாடசாலைகளுக்கும் கணினிகள் மற்றும் டெப் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13 வருட கட்டாய கல்வி, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இணைத்துக் கொண்டமை மற்றும் புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தபபட்டதன் மூலம் கல்வி துறையில் சிறந்த மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தனமல்வில தேசிய பாடசாலையின் புதிய தொழில்நுட்ப விஞ்ஞான பீடம் மற்றும் நிர்வாக கட்டிட தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்விலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
ஆயிரத்து 200 மில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் நவீன வசதிகளை கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் அதன் கட்டமைப்புக்களையும் பார்வையிட்டார். வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் கிராமிய பாடசாலைகளை நகர்புற பாடசாலைகளுக்கு இணைவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.