க.பொ.த உயர் தரப் பரீட்சையின் கணக்கியல், பொறியியல் தொழிநுட்பம், உயிர் முறைத் தொழிநுட்பம், மற்றும் தகவல் தொழிநுட்ப பிரிவு ஆகிய பாடங்களுக்கு கணிப்பான்களைப் (Calculator) பயன்படுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
“விஞ்ஞான கணிப்பான்கள் அனுமதிக்கப்படாது. எளிமையான (Non Programmatical Calculator) கால்குலேட்டர்களை மட்டுமே நாங்கள் அனுமதிப்போம், ”என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித நியுஸ் பெஸ்ட் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் ஏனைய பொதுத் தேர்வுகளுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவோம் என்று நம்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை கணக்காளர் சேவை (தரம் III) தேர்வறிகான பரீட்சையில் வினாப்பத்திரம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றுக்கு நிரல் படுத்தப்படாத அல்லாத கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இது இலங்கை வரலாற்றில் முதலாவது முயற்சியாகும்.
இருப்பினும், கைக்கடிகாரங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற தொடர்புடைய மின்னணு பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.