கம்பஹா மாவட்டத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மற்றொரு மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு விசேட பரீட்சை நிலையத்தில் குறித்த மாணவி பரீட்சை எழுதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.