சர்வதேச பாடசாலைகளின் மாணவர்களை தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்கும் படி கல்வி அமைச்சு கோரியுள்ளதாக சர்வதேச பாடசாலைகளின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தமது வீட்டு முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சு பணித்துள்ளது.
இதற்கு முன்னர் க. பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பாடசாலை அடிப்படையிலே சமர்ப்பித்ததாக சர்வதேச பாடசாலைகளின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு விசேட காரணம் ஏதும் கூறாது, கல்வி அமைச்சு திடீரென இவ்வாறான ஒரு புதிய சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் அதிக அசௌகரியங்களை எதிர்கொள்வதகாக சர்வதேச பாடசாலை தரப்பில ்தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித அவர்களிடம் வினவப்பட்ட போது, சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் தனி்பபட்ட பரீட்சார்த்திகள். எனவே தான் அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த உயர் தரப் பெறுபேறுகளின் படி ஸைசியம் சர்வதேசப் பாடசாலையின் மாணவி ஒருவர் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்றமையை அடுத்து பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தமை நினைவுகூரத்தக்கது.