க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்திபெறாத மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளாத எவரும் வைத்திய சபையில் மருத்துவராக பதிவு செய்யவதற்கான வாய்ப்பை ரத்துச் செய்து சுகாதார அமைச்சு ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது ஒன்பது ஆண்டுகால முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாக இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அமர்ந்து, குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்யாமல் வெளிநாட்டு மருத்துவ பட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இனி இலங்கை வைத்திய சபையில் மருத்துவராக பதிவு பெற முடியாது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் வலியுறுத்துகிறது