உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சமர்ப்பித்த இத்திட்டத்திற்கு சற்றுமுன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயர் தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கும் இத்திட்டம் பரீட்சார்த்த முயற்சியாக முதலாவது கட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.