கற்றலுக்கான வளங்களை வழங்கும் 3P Learning என்ற அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட உலக கணித தினம் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு மார்ச் 14 இல் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத்தின் முதலாவது புதன் கிழமை இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
இத்தினத்தை முன்னிட்டு இடம்பெறும் பிரதான நிகழ்வு உலகளாவிய ரீதியான மாபெரும் நிகழ்நிலை கணித போட்டியாகும். நிகழ்நிலை போட்டி பங்குபற்றுனர் எண்ணிக்கையில் கின்னஸ் சாதனையை பதிவு செய்துள்ள இப்போட்டியை 3P Learning அமைப்பு நடாத்துகின்றது.
இது வரை 240 நாடுகளைச் சேர்ந்த 5.9 மில்லின் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடம் சுமார் 38 000 கணித வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்ட எந்த மாணவரும் இப்போட்டியில் பங்குபற்ற முடியும்.
இந்நிகழ்வுக்கு UNICEF அனுசரணை வழங்குகின்றது.