மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் ஏனைய ஊரடங்கு பிரதேசங்களில் பரீட்சை எழுதும் மாணவர்களை பாதிக்காது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பின் நலன் கருதி நாளை நள்ளிரவு தொடக்கம் மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கடமைகளில் ஈடுபடுவோரும் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்கும் அங்கிருந்து வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதி உள்ளதாக அவர் தெரிவித்தார்.