ஊரடங்கு பிரதேசங்களில் இருந்து வெளிப் பிரதேச பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்ளுக்கு ஊரடங்குப் பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறே, பரீட்சை அனுமதி அட்டையை போக்குவரத்து அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தி பரீட்சைக்கு செல்லவும் பரீட்சை முடிந்து வீடுகளுக்கு செல்லவும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.