தனியார் பிரிவில் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களில் ஊழியர் ஒருவரை குறித்த நிறுவனத்தின் தேவைக்கேற்ப நீக்கும் பட்சத்தில் அவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட 12.5 லட்சம் ரூபா 25 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகிர்த்தியால் வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி, இதுவரை செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
குறித்த இழப்பீட்டு தொகை அறவிடுதல் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்