ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் சிங்கள ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ள கருத்துகள் இனவாதத்தை தோற்றுவிக்கக் கூடியது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செயன்முறை பிள்ளைகளிலும் ஆசிரியர்களிலம் இனவாத சிந்தனையை வளர்க்கும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறே ஊவா மாகாணத்தில் தற்போது காணப்படும் கல்வி அமைச்சை உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு இனவாதத்தைக் கக்கும் கல்வி அமைச்சு எந்த மாகாணத்திலும் இல்லை என்று தெரிவித்த அவர் ஜனாதிபதி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்காத போது தொழில்சங்க நடவடிக்கைகளில் தாம் இறங்க உள்ளவதாகவும் அவர் எச்சரித்தார்.
எந்த மாகாணத்திலும் தமிழ் கல்வி அமைச்சர் சிங்கள கல்வி அமைச்சர் என்ற பிரிவு இல்லை. ஊவா வில் மாத்திரம் ஏன் இவ்வாறு இன ரீதியான பிரிப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.