ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசியர் ஜயந்த லால் ரத்லசேகர தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் அனைவரும் 20 ஆம் திகதி காலை 8 மணி முதல் தமது விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் கொழும்புப் பல்கலைக்கழகம் 3 ஆம் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் அதே வேளை முதலாம் இரண்டாம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பட்டப் பின் கற்கைகள் மற்றும் இதர பாடநெறிகள் தொடர்பான விரிவுரைகள் ஜுன் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.