இரண்டாம் தவணைப் பரீட்சை எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்துச் செய்யப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக இரண்டாம் தவணைக்கான வகுப்புகள் ஒழுங்காக நடைபெறவில்லை. மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை என்பதைக் காரணம் காட்டி கல்வி அமைச்சிடம் ஆசிரியர் தொழில் சங்கம் இரண்டாம் தவணைப் பரீட்சை நடாத்துவது பொருத்தமில்லை எனவும் அதனை ரத்துச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள கல்வி அமைச்சு எச்சந்தர்ப்பத்திலும் இரண்டாம் தவணைப் பரீட்சை ரத்துச் செய்யப்படமாட்டாது என அறிவித்துள்ளது.