பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வணங்கி ஆசிர்வாதம் பெறுமாறு பிள்ளைகளை பழக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மஹஇலுப்பல்லம மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
”அதிபர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தக் கற்றுக் கொடுங்கள். எம்மைப் போன்ற கள்வர்களை வணங்கி ஆசிர்வாதம் பெறுமாறு பிள்ளைகளை பழக்க வேண்டாம். எம்மைப் போன்றவர்களுக்கு தலைவணங்கும் படி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம்.
இன்று பாராளுமன்றம் சென்றால் கவலைக்குரிய விடயம். அரச தரப்பு எதிர்தரப்புக்கு திருடர்கள் என்கின்றனர். இவ்வாறான பிள்ளைகள் தான் பெரியர்களாகி உயர் பதவிகளுக்குச் செல்கின்றனர். எனவே, உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தெடுங்கள். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குங்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.